Kathir News
Begin typing your search above and press return to search.

இந்துக்களுக்கு இப்படி ஒரு நிலையா ? பேருந்து நிறுத்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: இந்துக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு!

தமிழகம் முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக முக்கிய தளங்களில் மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கோயில்களில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் பலர் கோயில் முன்பாகவும், பேருந்து நிறுத்தத்திலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இந்துக்களுக்கு இப்படி ஒரு  நிலையா ? பேருந்து நிறுத்தத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம்: இந்துக்களை வாட்டி வதைக்கும் தி.மு.க. அரசு!

ThangaveluBy : Thangavelu

  |  6 Oct 2021 7:51 AM GMT

தமிழகம் முழுவதும் மஹாளய அமாவாசையை முன்னிட்டு முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதற்காக முக்கிய தளங்களில் மக்கள் கூடுவது வழக்கம். ஆனால் கோயில்களில் மக்கள் ஒன்றாக கூடுவதற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இதனால் பலர் கோயில் முன்பாகவும், பேருந்து நிறுத்தத்திலும் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கும் நிலை உருவாகியுள்ளது.

இது குறித்து காயத்ரி துரைசாமி தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது: சென்னை, மயிலாப்பூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மஹாளய அமாவாசையை தினத்தில் கோயில் குளங்களுக்கு வந்து, இறந்த முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது பொதுவான வழக்கம் ஆகும்.

அதே போன்று இன்று (அக்டோபர் 6) மயிலாப்பூர் குளத்திற்கு அருகாமையில் தர்ப்பணம் கொடுக்க வந்தவர்களை கொரோனா தொற்று காரணம் காட்டி போலீசார் விரட்டியடித்துள்ளனர். மேலும், சிலர் சடங்குகளை செய்ய வந்த குருக்களையும், காவல் நிலையத்திற்கு ஜீப்பில் அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.

ஆனால் சரவண ஸ்டோர் மற்றும் பெரிய மால்களில் திறக்கும்போது மட்டும் மக்கள் மகிழ்ச்சியுடன் வருவார்களா? ஏன் இந்த இரட்டை நிலைப்பாடு என்று திமுக அரசை கேள்வி எழுப்பியுள்ளார்.

ஆடி அமாவாசை அன்று கோவில்கள், நீர்நிலைகளில் தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாலையிலும் பேருந்து நிறுத்தங்களிலும் சிரார்த்தம் செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது மகாலயம் அமாவாசைக்கும் இதேபோன்று தடை விதிக்கப்பட்டுள்ளதால் மீண்டும் இந்துக்கள் அவதிப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

Source, Image Courtesy: Face book

Next Story
கதிர் தொகுப்பு
Trending News