Kathir News
Begin typing your search above and press return to search.

பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!

யூடியூபில் ஆபாசமாக பேசிய வழக்கு மற்றும் பண மோடி உள்ளிட்டவைகளுக்காக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

பப்ஜி மதன் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்.!
X

ThangaveluBy : Thangavelu

  |  6 July 2021 11:55 AM IST

ஆபாசமாக பேசியதாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பப்ஜி மதன் மீது தற்போது குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டை யூடியூப் மூலமாக ஆபாசமாக பேசி வெளியிட்டு வந்தார் பப்ஜி மதன். பப்ஜி மதன் யூடியூப் சேனலை சப்ஸ்கிரைபர் அனைவரும் 16 முதல் 18 வயதுக்குட்பட்டவர்களே அதிகமானோர் என தெரியவந்தது.


இதனை தொடர்நது மதன் மீது 150க்கும் மேற்பட்ட வழக்குகள் சைபர் கிரைம் போலீசாருக்கு கிடைத்தது. இதனையடுத்து பப்ஜி மதனை கைது செய்ய போலீசார் தீவிரமாக ஈடுபட்டபோது அவர் தலைமறைவானர். அப்போது மதனுக்கு உடந்தையாக இருந்த அவரது மனைவி கிருத்திகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். அவருடன் கைக்குழந்தையும் சிறைக்கு செல்லும் சூழ்நிலை நேர்ந்தது. இதனை தொடர்ந்து தருமபுரி பதுங்கியிருந்த மதனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


இதனிடையே ஜாமீன்கோரி கிருத்திகா நீதிமன்றத்தை நாடினார். அப்போது குழந்தையுடன் இருக்கும் காரணத்தினால் அவருக்கு ஜாமீன் வழங்கப்பட்டது. மேலும், மதன் சைதாப்பேட்டை குற்றவியல் நீதிமன்றத்தில் ஜாமீன் மறுக்கப்பட்டதால், முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவர் ஜாமீன் கோரி மனுத்தாக்கல் செய்தார். அவரது ஜாமீன் மனுவை நீதிபதிகள் ஏற்கவில்லை.

இந்நிலையில், யூடியூபில் ஆபாசமாக பேசிய வழக்கு மற்றும் பண மோடி உள்ளிட்டவைகளுக்காக குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது. இரண்டு முறை ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், குண்டர் சட்டம் பாய்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News