யூடியூபில் 20 மணி நேரம் உழைச்சி சம்பாதித்தார்: பப்ஜி மதன் மனைவி கிருத்திகா பேட்டி.!
பப்ஜி மதன் மீது எந்த ஒரு முகாந்திரமும் இல்லாமல் குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவரது மனைவி கிருத்திகா பேட்டியில் கூறியுள்ளார். ஆபாச பேச்சு மற்றும் பண மோசடியில் ஈடுபட்டதாக பப்ஜி மதன் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

By : Thangavelu

இந்நிலையில், பப்ஜி மதன் மனைவி கிருத்திகா சென்னை, வேப்பேரியில் செய்தியாளர்களை திடீரென்று சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது: கடந்த 10 வருடங்களாக மதன் எந்த ஒரு சொத்துக்களையும் வாங்கியதில்லை. மதனுடன் ஆபாசமாக பேசுகின்ற பெண் குரல் என்னுடையது இல்லை.
மேலும், பப்ஜி விளையாட்டின் போது பேசியது எனது குரல் என்று பரவிய செய்தி தவறானது. நான் எந்த ஒரு யூடியூப் சேனலுக்கு அட்மினாக இருந்தது இல்லை. தொடர்ந்து அவர் பேசும்போது, மதன் வீடுகள், கார்கள் போன்ற எந்த ஒரு சொத்துக்களையும் வாங்கி குவிக்கவில்லை. எங்களுக்கு சொந்த வீடு கூட கிடையாது. 2 சொகுசு கார்கள் கிடையாது. ஆடி ஏ6 கார் மட்டுமே வைத்துள்ளோம்.
போலீசார் பறிமுதல் செய்த மற்றொரு கார் மதனுடையது இல்லை. யாருடையது என்று போலீசார் தெரிவிக்க வேண்டும். அது மட்டுமின்றி யூடியூபில் தினமும் 20 மணி நேரம் உழைத்து சம்பாதித்துள்ளார். இவ்வாறு அவர் கூறினார்.