Kathir News
Begin typing your search above and press return to search.

சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பு.!

சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பு.!

சென்னை உட்பட 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை : முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமிழக அரசு அறிவிப்பு.!
X

Rama SubbaiahBy : Rama Subbaiah

  |  25 Nov 2020 4:41 PM GMT

நிவர் புயல் தற்போது சென்னைக்குத் தென் கிழக்கே சுமார் 300 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து கிழக்கு தென் கிழக்கே சுமார் 250 கிலோமீட்டர் தொலைவிலும் கடலூரிலிருந்து சுமார் 240 கிலோ மீட்டர் தொலைவில் மையம் கொண்டுள்ளது.

இந்நிலை மேலும் வலுவடைந்து அதி தீவிர புயலாக மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து இன்று இரவு புதுச்சேரி அருகில் கரையைக் கடக்கக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
இன்று நள்ளிரவு அல்லது நாளை காலை கரையைக் கடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

2015-ம் ஆண்டுக்குப் பிறகு தற்போது செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக 1000 கன அடி நீர் திறக்கப்படுகிறது. அடையாறு ஆற்றங்கரையோர மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஏராளமான மக்கள் ஆபத்தான இடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டு பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் சென்னை தவிர மேலும் பல மாவட்டங்கள் பாதிக்கப்படக் கூடும் என்பதால் 13 மாவட்டங்களுக்கு நாளை பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி சென்னை, வேலூர், கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம், திருவாரூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், தஞ்சாவூர், மயிலாடுதுறை, திருவண்ணாமலை, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய 13 மாவட்டங்களில் நிவர் புயல் காரணமாக நாளை பொது விடுமுறை என முதல்வர் பழனிசாமி அறிக்கைவிடுத்துள்ளார். புதுச்சேரிக்கு ஏற்கனவே 3 நாள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News