சிறார்களை கட்டட வேலைக்கு பயன்படுத்திய கொடூரம்: காப்பகத்திற்கு சீல் வைப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், விராலிமலை அருகே அனுமதியின்றி குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்தது மட்டுமின்றி சிறார்களை கட்டட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் அனுப்பியதாக அரசுப் பள்ளி ஆசிரிரையும், அவரது கணவரையும் போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர்.
By : Thangavelu

குடுமியான்மலை அரசு உயர்நிலைப் பள்ளி ஆசிரியராக பணியாற்றி வருபவர் கலைமகள். இவரது கவணவர் ஆதரவற்ற குழந்தைகள் நல காப்பகம் நடத்தி வந்துள்ளார். சுமார் 20க்கும் மேற்பட்ட சிறார்கள் அங்கு தங்கியுள்ளனர். அப்போது சிறார்களை கட்டிட வேலைகளுக்கும், வயல் வேலைகளுக்கும் அனுப்பி வந்துள்ளனர். அது மட்டுமின்றி சரியான சாப்பாடு வழங்காமலும் கொடுமை படுத்தியுள்ளனர்.
இதனிடையே ஆட்சியர் கவனத்துக்கு சென்ற பின்னர் குழந்தைகள் நல அலுவலகத்தில் விசாரணை நடைபெற்றபோது, காப்பகம் நடத்துவதாக கூறி வெளிநாடுகளில் இருந்து நன்கொடை பெற்றும் மோசடி செய்தது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.
இதனை தொடர்ந்து அந்த காப்பகத்திற்கு சீல் வைத்த அதிகாரிகள், அங்கிருந்த குழந்தைகளை மீட்டு வெள்ளனூர் குழந்தைகள் நல காப்பகத்தில் ஒப்படைத்தனர். குழந்தைகளை வைத்து கட்டட வேலைக்கு அனுப்பிய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Source, Image Courtesy: Polimer