Kathir News
Begin typing your search above and press return to search.

மாநில சுயாட்சி பற்றி பேசும் ஸ்டாலின், புதுச்சேரி நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?

மாநில சுயாட்சி பற்றி பேசும் ஸ்டாலின், புதுச்சேரி நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன?
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  11 Jun 2022 5:30 AM IST

முதலமைச்சர் ஸ்டாலின் கார்ப்பரேட் நிறுவனத்தின் கார்டிலியர் குரூஸ் என்ற சொகுசு கப்பலை சென்னை துறைமுகத்தில் தொடங்கி வைத்தார். சென்னை, விசாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களில் சுற்றுலா பயணிகளை ஏற்றி இறக்குவார்கள் என்று அறிவித்தார்.

சொகுசு கப்பல் தொடர்பாக எங்களிடம் யாரும் எந்தவித அனுமதியும் கேட்கவில்லை. அப்படி அனுமதி கேட்டாலும் சூதாட்டம் நடைபெற்றால் நாங்கள் அனுமதி வழங்க மாட்டோம். கலாசார சீரழிவுக்கான எந்த நடவடிக்கைக்கும் அனுமதி கொடுக்க மாட்டோம் என புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை அறிவித்தார். சூதாட்ட கேளிக்கை கப்பல் இன்று புதுச்சேரிக்கு வந்தது..

கப்பலில் இருந்து பயணிகளை இறக்கவோ, ஏற்றவோ எங்கள் கூட்டணியின் முதலமைச்சர் ரங்கசாமி அவர்கள் அனுமதி வழங்கவில்லை. இதன் காரணமாக ஒரு மணி நேரம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பல் திருப்பி அனுப்பப்பட்டது.

தமிழ்நாட்டின் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள் புதுச்சேரி நிர்வாகத்தில் தேவையற்ற முறையில் குறுக்கீடு செய்வது தவறான ஒன்றாகும். தொடர்ந்து மாநில அந்தஸ்து, மாநில சுயாட்சி பற்றி பேசும் தி.மு.க தலைவர் ஸ்டாலின் ஏன் புதுச்சேரி நிர்வாகத்தில் தலையிட வேண்டிய அவசியம் என்ன? என புதுச்சேரி கிழக்கு மாநில அ.தி.மு.க செயலாளர் அன்பழகன் கண்டனம் தெரிவித்தார்.

Inputs From: Vikadan



Next Story
கதிர் தொகுப்பு
Trending News