Kathir News
Begin typing your search above and press return to search.

புரெவி புயல்.. தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.. சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பதிவு.!

புரெவி புயல்.. தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.. சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பதிவு.!

புரெவி புயல்.. தமிழகம் முழுவதும் கொட்டித்தீர்த்த கனமழை.. சிதம்பரத்தில் 34 செ.மீ., மழை பதிவு.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  4 Dec 2020 10:13 AM GMT

வங்கக்கடலில் நிலைகொண்டுள்ள ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரமாக நகராமல் ஒரே இடத்தில் நீடிப்பதால் மிக கனமழை தொடர வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.


புரெவி புயல் எதிரொலியால் தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது. அதில் கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அதிகபட்சமாக 34 சென்டி மீட்டர் மழையும், பரங்கிப்பேட்டையில் 26, காட்டுமன்னார்கோவில், குறிஞ்சிப்பாடியில் 25, பேச்சியார்தோப்பு 20, புவனகிரி 19 சென்டி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

மேலும், திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் 22 செ.மீ., குடவாசலில் 21 செ.மீ., நன்னிலத்தில் 14 செ.மீ., வலங்கைமானில் 13 செ.மீ. மழை கொட்டி தீர்த்துள்ளது. அரியலூர் மாவட்டத்தில் ஜெயங்கொண்டம் 11 செ.மீ., திருமானூர் 9.7 செ.மீ., செந்துறை 9.5 செ.மீ., அரியலூரில் 7.4 செ.மீ. மழையும் பெய்துள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் கண்ணன்கோட்டை, ஜீரோ பாயிண்ட்டில் தலா 11 செ.மீ., சோழவரத்தில் 9 செ.மீ., மழை பதிவாகி உள்ளது. மேலும், இன்றும் தமிழகம் முழுவதும் மழை பெய்து வருகிறது. இதனால் நீர்நிலைகள் வேகமாக நிரம்பி வருகிறது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பல்வேறு இடங்கள் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News