Kathir News
Begin typing your search above and press return to search.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு! முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு!

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். கொரோனா தொற்று என்பதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 10.30 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

தமிழக ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்பு! முதலமைச்சர், எதிர்க்கட்சித் தலைவர் பங்கேற்பு!

ThangaveluBy : Thangavelu

  |  18 Sep 2021 2:49 AM GMT

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக ஆர்.என்.ரவி இன்று பதவியேற்றுக் கொள்கிறார். கொரோனா தொற்று என்பதால் கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் திறந்த வெளியில் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. அங்கு காலை 10.30 மணியளவில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற உள்ளது.

புதிய ஆளுநருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி பதவிப்பிரமாணம் செய்து வைக்கிறார். இந்த விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி மற்றும் அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், நீதிபதிகள், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மற்றும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்க உள்ளனர்.

இந்த விழாவில் அரசு அதிகாரிகள் உட்பட 500 பேருக்கு மட்டுமே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Source, Image Courtesy: Puthiyathalamurai


Next Story
கதிர் தொகுப்பு
Trending News