ரேஷன் கடைகளில் நாளை முதல் கைவிரல் ரேகை பதிவு.. தமிழக அரசு உத்தரவு.!
ரேஷன் கடைகளில் நாளை (ஜூலை 1) முதல் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமலாகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

By : Thangavelu
ரேஷன் கடைகளில் நாளை (ஜூலை 1) முதல் கைவிரல் ரேகை பதிவு நடைமுறை மீண்டும் அமலாகிறது என்று தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
இது பற்றி தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழக அரசு ரூ.4000 இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டு வருகிறது.
அதனுடன் 14 வகை மளிகைப்பொருட்களும் வழங்கப்பட்டு வருகிறது. இதனால் பொதுமக்கள் ஒரே நேரத்தில் ரேஷன் கடை முன்பு கூடுவதால் கூட்ட நெரிசல் ஏற்படும் நிலை ஏற்படும் என்பதால் கைவிரல் ரேகை பதிவின்றி வழங்கப்பட்டது. தற்போது நிவாரண உதவித் தொகை 98.59 சதவீதமும் மற்றும் மளிகைப் பொருட்கள் 93.99 சதவீதம் வரை வழங்கப்பட்டுள்ளது.
இந்த மாத இறுதிக்குள் முழுவதுமாக விநியோகம் முடிக்கப்படும் நிலையில் உள்ளதால் நாளை முதல் புதிய குடும்ப அட்டை ஒப்புதல் அளிக்கும் சேவை, புதிய குடும்ப அட்டை அச்சிடும் பணியை மேற்கொள்வதற்கும் மற்றும் கைவிரல் ரேகைப் படிப்பினையும் மீள செயல்முறைப்படுத்தவும் அனுமதி வழங்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
