Begin typing your search above and press return to search.
கூடுதலாக கொரோனா தடுப்பூசிகள்.. மத்திய அரசுக்கு கோரிக்கை வைத்த சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன்.!
தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.

By : Thangavelu
தமிழகத்திற்கு கூடுதலாக கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் வலியுறுத்தியுள்ளார்.
டெல்லியில் மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷனை, தமிழக சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் சந்தித்து பேசினார். அப்போது தமிழகத்திற்கு கூடுதல் கொரோனா தடுப்பூசி வழங்க வேண்டும், கருப்பு பூஞ்சை நோயிக்கு பயன்படுத்தப்படும் ஆம்போடெரிசின்பி மருந்து ஒதுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.
இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த ராதாகிருஷ்ணன், மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண், நிதி ஆயோக் உறுப்பினர் உள்ளிட்டோரை சந்தித்தேன். தமிழகத்திற்கு தேவையான தடுப்பூசி வழங்குவது குறித்து பேசினேன். இரண்டு நாட்களில் தடுப்பூசி கூடுதலாக வழங்கப்படும் எனக் கூறினார்.
Next Story
