ரயில் நிலையங்களில் விரைவில்: மாற்றுத்திறனாளிகளுக்கு உதவும் வகையில் வண்ணமயமான குறியீடு!
ரயில் நிலையங்களில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் பயணிகளுக்கு உதவு வகையில் வண்ணமயமான குறியீடுகள்.
By : Bharathi Latha
ரயில்வேயின் அம்ருத் பாரத் ரயில் நிலைய திட்டத்தின் நவீன வசதிகளை செய்து மேம்படுத்துவதற்காக சுமார் 1,275 ரயில் நிலையங்கள் அடையாளம் காணப்பட்டு இருக்கிறது. எல்லைப் பகுதிகள் மற்றும் தொலைதூர கிராமங்கள் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள இந்த ரயில் நிலையங்களில் மறுசீரமைப்பு பணிகள் தற்போது தொடங்கப்பட்டு இருக்கிறது. இதில் பல்வேறு வசதிகள் செய்யப்பட்டதுடன் பயணிகள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் எளிதில் புரிந்து கொள்ளும் வகையில் வண்ணமயமான எழுத்து மற்றும் குறியீடுகள் பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
முதற்கட்டமாக மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் ரயில் நிலையத்தில் மேற்படி வசதிகள் செய்யப்பட்டு இருப்பதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. குறிப்பாக அறிவிப்பு பலகைகள் மற்றும் குறியீடு வசதிகள் அனைத்திலும் பிரதிபலிக்கும் ஒளியுடன் கூடிய வண்ணமயமான குறியீடுகள் அமைக்கப்பட்டு உள்ளது. மத்திய ரயில்வே மேற்கொண்டுள்ள இந்த வசதிகள் 1,200க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களிலும் மேற்கொள்ளப்பட இருக்கிறது.
இந்த குறியீடுகள் மற்றும் எழுத்துக்கள் அனைத்தும் ரயில் நிலையங்களிலும் பல வண்ணங்களில் அதே நேரம் ஒரே மாதிரியாக இருக்கும் எழுத்துக்கள் பெரிய எழுத்துருவில் இருக்கும். இது பயணிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகள் தொலைவில் இருந்தே பார்த்து தெரிந்து கொள்ளும் வசதியாக இருக்கும். குறிப்பாக ஓய்வு அறை மற்றும் ரயில் நிலையத்தில் உள்ள முக்கிய அலுவலர்களின் குறித்த அறிவிப்பு இடம் பெற்று இருக்கும் என்று ரயில்வே தரப்பில் தற்போது கூறப்பட்டு இருக்கிறது.
Input & Image courtesy: News