தமிழகத்தில் 18 மாவட்டங்களில் ஒரு சில மணி நேரங்களில மழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் தகவல்!
தெற்கு வங்க கடல் பகுதியில் மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகத்தில் ஏனைய மாவட்டங்களில் மழை பெய்யவதற்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாக மீண்டும் இடி, மின்னலுடன் கனமழை பெய்து வருகிறது.

By : Thangavelu

இந்நிலையில், தமிழகத்தில் 18 மாவட்டங்களில் அடுத்து வருகின்ற 2 மணி நேரத்திற்குள் மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. அதன்படி சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, கடலூர், தஞ்சாவூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், மிதமான மழை பெய்வதற்கு வாய்ப்பு உள்ளது.
மேலும், அரியலூர், பெரம்பலூர், திருச்சி, தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய மாவட்டங்களிலும் அடுத்து வருகின்ற 2 மணி நேரத்திற்கு மிதமான மழை தொடரும். தென்கடலோர தமிழகமான குமரிப்பகுதி, தென்மேற்கு வங்காள விரிகுடா பகுதிகளில் காற்றின் வேகம் மிகவும் அதிகமான இருக்கும் என்பதால் மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Source, Image Courtesy: Daily Thanthi