Kathir News
Begin typing your search above and press return to search.

கடலூரில் ஏற்பட்ட மழை சேதம்.. அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர்.!

கடலூரில் ஏற்பட்ட மழை சேதம்.. அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர்.!

கடலூரில் ஏற்பட்ட மழை சேதம்.. அதிகாரிகளிடம் கேட்டறிந்த முதல்வர்.!

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  10 Dec 2020 10:25 AM GMT

தமிழகம் முழுவதும் நிவர், புரெவி புயல் காரணமாக கடலோர மாவட்டங்களில் கனமழை பெய்து வந்தது. இதில் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மிதக்கும் நிலை ஏற்பட்டது. இந்த ஆண்டுக்கு நடவு செய்த பயிர்கள் அனைத்தும் வீனாகிவிட்டது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை, தஞ்சாவூர், திருவாரூர், கடலூர் மாவட்டங்களில் மழை சேதங்கள் மற்றும் நிவாரணப்பணிகளை ஆய்வு செய்து வருகிறது. இந்நிலையில், கடலூர் மாவட்டம், சிதம்பரம் அருகே சாலியன்தோப்பு கிராமத்தில், கடலூர் மாவட்டத்தில் புயல் மற்றும் கன மழையால் சேதமடைந்த பயிர்கள் குறித்து தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறையால் காட்சிப்படுத்தப்பட்டுள்ளதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்.

அவருடன் அமைச்சர்கள், பி.தங்கமணி, எம்.சி.சம்பத், சட்டமன்ற உறுப்பினர்கள், வேளாண்மைத்துறை முதன்மைச் செயலாளர் கங்கன் தீப்சிங் பேடி, கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சந்திர சேகர சாகமூரி, மற்றும் தோட்டக்கலை உயர் அதிகாரிகள் ராஜாமணி, சுரேஷ் ராஜா ஆகியோர் பலர் உடனிருந்தனர்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News