19 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை மைய இயக்குநர்.!
19 மாவட்டங்களில் மழை நீடிக்கும்.. வானிலை மைய இயக்குநர்.!
By : Kathir Webdesk
சென்னை, விழுப்புரம் உள்ளிட்ட 19 மாவட்டங்களில் இன்று மழை நீடிக்கும். வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள நிவர் நேற்று இரவு பாண்டிச்சேரி, மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. இதனால் நேற்று இரவு பலத்த காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.
இந்நிலையில், கடலூரில் அதிகபட்சமாக 24.6 சென்டிமீட்டரும் புதுச்சேரியில் 23.7 சென்டிமீட்டரும், காரைக்காலில் 8.6 சென்டிமீட்டரும் மழை பாதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. சென்னையில் கடந்த 24 மணி நேரத்தில் 8.9 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
மேலும், நாகப்பட்டினத்தில் 6.3 சென்டிமீட்டர், சேத்துப்பட்டில் 13 சென்டிமீட்டர், வந்தவாசியில் 11 சென்டிமீட்டர், ஆரணியில் 8.4 சென்டிமீட்டர், ஆரணியில் 8.4, திருவண்ணாமலையில் 7 சென்டிமீட்டர் மழை பதிவாகியுள்ளது.
இன்றும் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி ஆகிய 4 மாவட்டங்களில் மிகவும் கனமழை பெய்யும் என்றும் சென்னை, திருச்சி, அரியலூர், தருமபுரி, கிருஷ்ணகிரி, நாகை, மயிலாடுதுறை உள்ளிட்ட 15 மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை மையம் கூறியுள்ளது.
சென்னை, விழுப்புரம், நாகை போன்ற மாவட்டங்களில் மின் கம்பங்கள், மரங்கள் விழுந்துள்ளது. இதனை சரிசெய்யும் பணியில் அரசு ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.