Begin typing your search above and press return to search.
மழையால் சேதமடைந்த விவசாய பயிர்கள்: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு.!
மழையால் சேதமடைந்த விவசாய பயிர்கள்: ஆய்வு செய்ய தமிழகம் வருகிறது மத்திய குழு.!

By :
தமிழகம் முழுவதும் கடந்த ஜனவரி மாதம் பெய்த கனமழையால் விவசாய பயிர்கள் அனைத்தும் சேதமடைந்தது. இந்த பாதிப்புகளை ஏற்கெனவே மத்திய குழு ஆய்வு செய்த நிலையில், தற்போது மீண்டும் மத்திய குழுவினர் நாளை தமிழகம் வருகின்றனர்.
டெல்லியில் இருந்து தமிழகத்திற்கு 6 பேர் கொண்ட குழு வருகிறது. இவர்கள் இரண்டு குழுக்களாக பிரிந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ளவுள்ளனர்.
டெல்லியில் இருந்து மதுரைக்கு விமானம் மூலம் 3 பேர் கொண்டு குழு வருகிறது. இந்த குழுவானது விருதுநகர், நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் ஆய்வுப்பணிகளை மேற்கொள்கிறது.
மற்றொரு குழுவானது டெல்லியில் இருந்து திருச்சிக்கு வருகை தருகின்றனர். அவர்கள் தஞ்சை, நாகை, மயிலாடுதுறை, கடலூர், திருவாரூர் உள்ளிட்ட மாவட்டங்களை ஆய்வு செய்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story