Kathir News
Begin typing your search above and press return to search.

ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.. விக்கிரமராஜா பேட்டி.!

ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.. விக்கிரமராஜா பேட்டி.!

ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் தான்.. விக்கிரமராஜா பேட்டி.!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  30 Dec 2020 4:58 PM GMT

அரசியலுக்கு வந்தாலும் வரவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் நடிகர் ரஜினிகாந்த் என்றுமே சூப்பர் ஸ்டார் தான் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா கூறியுள்ளார்.

சென்னையில் நடந்த செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது: கொரோனா கட்டுப்பாடு அறிவிப்பு வந்திருக்கும் சூழலில், பண்டிகைக் காலம் நெருங்குவதால் கடைகள் அடைப்பு நேரத்தை தளர்வு செய்ய வேண்டும் என்றும் தை மாதம் வியாபாரிகள் எந்த வித இடையூறும் இன்றி வியாபாரம் செய்ய அரசு வழிவகை செய்ய வேண்டும் என்றும் கொரோனாவால் உயிரிழந்த வியாபாரிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

மேலும், நடிகர் ரஜினியை யாரும் அரசியல் தலைவராக பார்க்காததால், அவர் என்றுமே சூப்பர் ஸ்டார் தான். உடல்நிலை காரணத்தால் தான் அவரது அரசியல் பயணம் தடை பட்டுள்ளது. அவரது அறிவிப்பை நாங்கள் வரவேற்கிறோம்.

மருத்துர்களின் பரிந்துரையின் பேரில், உடல் நிலையை கருத்தில் கொண்டு அவர் கவனமாக செயல்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News