தமிழகத்தில் காலியாக உள்ள 3 இடங்களில் ஒரு மாநிலங்களவை இடத்திற்கு மட்டும் தேர்தல் !
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் வருகின்ற 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் 3 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான இடங்கள் காலியாக உள்ள நிலையில் ஒரு இடத்திற்கு மட்டும் வருகின்ற 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், அதிமுக மாநிலங்களவை உறுப்பினராக இருநுத முகமது ஜான் மரணமடைந்தார். தற்போது அந்த இடத்திற்கு வருகின்ற 13ம் தேதி தேர்தல் நடைபெறும் என கூறப்பட்டுள்ளது.
இதற்கான வேட்புமனு ஆகஸ்ட் 31ம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என தேர்தல் ஆணையம் கூறியுள்ளது. செப்டம்பர் 13 அன்று வேட்புமனுவை திரும்ப பெற்றுக்கொள்ளலாம். மேலும், 13ம் தேதி கொரோனா பாதுகாப்பு நடைமுறைகளை பின்பற்றி காலை 9 மணி முதல் மாலை 4 மணிக்குள் தேர்தலை நடத்தி முடிக்க வேண்டும் என தலைமைச் செயலாளருக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
Source: Puthiyathalamurai
Image Courtesy:Pragativadi
https://www.puthiyathalaimurai.com/newsview/113147/Election-for-one-of-the-3-vacant-places-in-Tamilnadu