Kathir News
Begin typing your search above and press return to search.

பழமையான அம்மன் கோவில் சீரமைக்க கோரி வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!

ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பழமையான அம்மன் கோயிலை சீரமைக்க தொடர்பான வழக்கு.

பழமையான அம்மன் கோவில் சீரமைக்க கோரி வழக்கு - அரசு பதிலளிக்க நீதிமன்றம் அவகாசம்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  9 Feb 2023 1:55 AM GMT

தற்பொழுது ராமநாதபுரத்தில் மிகவும் பழமையான அம்மன் கோவில் ஒன்று உள்ளது. அதனை சீரமைக்க கோரி தற்போது மதுரை உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்று தொடர் பற்றி இருக்கிறது. குறிப்பாக மதுரை மனிதநேய கட்சி மாநில வழக்கறிஞர் ஆசிக் மதுரை ஐகோர்ட்டில் தற்பொழுது இந்த ஒரு வழக்கு தாக்கல் செய்து இருக்கிறார். அவர் கூறிய மனைவி கூறியிருப்பதாவது, இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள பாசி பட்டினம் கி.பி 875 முதல் கி.பி 1090-ம் ஆண்டு வரை துறைமுகமாக இருந்தது.


இதன் கடற்கரை அருகில் சோழர் காலத்தில் கட்டப்பட்ட கோவில் அம்மன் மண்டபம் என்று கோவில் இருந்தது. இந்த கோவிலில் உள்ள பாசி அம்மன் எட்டு கைகளுடன் சோழர்களின் வெற்றியின் அடையாளமாக காட்சியளிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் இந்த கோவில் தற்போது எந்த சிறப்பாக பராமரிப்பும் இன்றி சிதலம் அடைந்து காணப்படுகிறது. எனவே பழமையான இந்து கோயிலை வைத்து பாதுகாத்திட உத்தரவிட வேண்டும் என்று மனதில் கூறப்பட்டிருக்கிறது.


இந்த வழக்கு நீதிபதிகள் கிருஷ்ணகுமார் விஜயகுமார் ஆகியோர் அமர்வுக்கு முன்னிலையில் வந்தது. அப்பொழுது இந்த மனுதாரர் சார்பில் கோவிலின் தற்போதைய நிலைமை குறித்த புகைப்படங்கள் கூடுதலாக தாக்கல் செய்யப்பட்டு இருந்தனர். அவற்றை அரசு தரப்பு இந்த வழக்கு குறித்து விளக்கு மளிக்க வேண்டும் என்றும் அதற்காக அரசுக்கு கால அவகாசம் தருமாறும் கோரப்பட்டு இருந்தது. அதனை தொடர்ந்து நீதிபதிகள் இந்த வழக்கை ஒரு வாரத்திற்கு தற்பொழுது ஒத்து வைத்திருக்கிறார்கள்.

Input & Image courtesy: Dinamalar

Next Story
கதிர் தொகுப்பு
Trending News