நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்தடைந்த ராமர் சிலை பாறை: அபூர்வ பாறையின் சிறப்பு தெரியுமா?
ராமர் சிலை செய்வதற்கான பாறைகள் அயோத்தி வந்தடைந்து இருக்கிறது.
By : Bharathi Latha
அயோத்தியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுமானம் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. குறிப்பாக அடுத்த ஆண்டு அதாவது 2024 ஆம் ஆண்டு மகர சங்கராந்தி நாளில் ராமர் கோயில் பக்தர்களுக்காக திறக்கும் வகையில் தற்பொழுது அங்கு பணிகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கோவில் கர்ப்பகிரகத்தில் சிலை செய்வதற்கான ராமர் சிலைகள் தற்பொழுது நேபாளத்தில் இருந்து அயோத்தி வந்தடைந்து இருக்கிறது.
குறிப்பாக இந்த கல்லில் ராமரின் குழந்தை வடிவ சிலை நிறுவப்பட இருப்பதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இதை செய்வதற்கு இரண்டு அபூர்வ பாறைகள் நேபாள நாட்டிலிருந்து முஸ்தாக் மாவட்டம் முக்திநாத் அருகே உள்ள கண்டாகி ஆற்றில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டு இருக்கிறது. இவை ஆறு கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்தது. ஒரு பாறை 26 டன் இடையும் இன்னொரு பாறை 14 டன் எடையும் கொண்டது. இந்த பாறை இரண்டு சரக்கு லாரிகளில் எற்றப்பட்டு கடந்த மாதம் 25ஆம் தேதி நேபாளத்தில் இருந்து புறப்பட்டது என்று தற்பொழுது அயோத்தி அண்டு அடைந்து இருக்கிறது.
இதற்கு 51 வேத விற்பனர்கள் வழிபாடு செய்தார்கள் குறிப்பாக மிகவும் அபூர்வமான பழமை வாய்ந்த இந்த கற்கள் மூலம் ராமரின் குழந்தை வடிவ சிலை செதுக்கப்பட இருப்பதும் குறிப்பிடத்தக்கது. கர்ப்பகிரகத்தில் இந்த ஒரு சிலை இடம்பெறும் அதற்காக தற்போது இந்த கல்லை நோக்கி பல்வேறு பக்தர்கள் சிறப்பு வழிபாடு செய்தார்கள்.
Input & Image courtesy: Times of India