ராமேஸ்வரம்: இபாஸ் இல்லாத சுற்றுலாப்பயணிகள் தடுத்து நிறுத்தம்.!
கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை அமலில் இருப்பதால் முககவசம் இல்லாமல் சென்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.

By : Thangavelu
ராமேஸ்வரத்தில் வெளிமாநிலம் மற்றும் வெளிமாவட்ட சுற்றுலாப்பயணிகளுக்கு முழு பரிசோதனைக்கு பின் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று இ பாஸ் இல்லாத சுற்றுலா பயணிகளும் தடுத்து நிறுத்தப்பட்டு வருகின்றனர்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாக கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வருகிறது. இதனை தடுக்கும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. அதன்படி கோயில்களுக்கு கட்டுப்பாடு, திருமணம் மற்றும் துக்க காரியங்களுக்கும் நிபந்தனையுடன் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். சுற்றுலாதளத்திற்கும் அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் கட்டுப்பாடுகளை விதித்து வருகின்றனர்.
இந்நிலையில், ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்திற்கு தமிழகம் மட்டுமின்றி வெளி மாநிலங்களில் இருந்து தினமும் ஆயிரக்கணக்கான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது கொரோனா வைரஸ் தொற்று தடுப்பு நடவடிக்கை அமலில் இருப்பதால் முககவசம் இல்லாமல் சென்றவர்களுக்கு மாவட்ட காவல்துறை மற்றும் சுகாதாரத்துறையினர் அபராதம் விதித்து வருகின்றனர்.
அதே போன்று ராமேஸ்வரம் வரும் சுற்றுலா பயணிகள் ராமேஸ்வரம் நுழைவாயிலில் நிறுத்தப்பட்டு முககவசம் அணிந்துள்ளனரா என்று கண்காணிக்கப்பட்டு வருகின்றனர். அதே போன்று இபாஸ் வைத்துள்ளனரா என்று வெளிமாநில சுற்றுலாப்பயணிகளை போலீசார் கண்காணித்து வருகின்றனர். இபாஸ் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பப்பட்டு வருகின்றனர்.
