பல பதக்கங்களை குவித்தும் வறுமையால் பரிதவிக்கும் பள்ளி மாணவன்!
By : Thangavelu
ராமநாதபுரம் மாவட்டம், ராமேஸ்வரம் அடுத்த தங்கச்சிமடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு படித்து வருபவர் லோகசுதன். இவர் சிலம்பம் கற்பதில் மிகுந்த ஆர்வம் கொண்டிருப்பதால் எந்த ஒரு பயிற்சி ஆசிரியரும் இல்லாமல் சிறு வயது முதலே சிலம்பம் பயிற்சியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
மாவட்டம் மற்றும் மாநில அளவில் போட்டிகளில் இவர் கலந்து கொண்டு பல பரிசுகளை வென்றுள்ளார். கடந்த 3ம் தேதி சென்னையில் நடைபெற்ற குளோபல் வோர்ல் ரெகார்டில் 4 மணி நேரம் தொடர்ச்சியாக சிலம்பம் சுற்றி முதல் இடம் பிடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இது போன்று பல போட்டிகளில் கலந்து கொண்டு லோகசுதன் பரிசுகளை வென்றுள்ளார்.
தனது வீட்டில் மிகப்பெரிய அளவில் வறுமை இருந்தும், எந்த போட்டிக்கும் சென்றாலும் கட்டிடம் கட்டும் சித்தால் வேலைக்கு சென்று அதில் கிடைக்கும் குறைந்த அளவிலான பணத்தை வைத்துக்கொண்டு எந்த ஊர்களில் நடைபெறுகிறதா அங்கு சென்று விளையாட்டில் கலந்து கொள்வார். இவரது குடும்பம் மிகவும் வறுமையில் சிக்கியுள்ளது. இவரின் தந்தை இருதய சிகிச்சை பெற்று வருகின்றார்.
இதனால் பல்வேறு போட்டிகளில் கலந்து கொள்வதை தவிர்த்து வேலைக்கு சென்று தனது குடும்பத்தை காப்பாற்றும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார். இதற்கிடையில் தனக்கு சிலம்பம் போட்டியில் சென்று சாதனை படைக்க வேண்டும் என்று ஆசை உள்ளது. தங்களால் முடிந்த உதவியை வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் வைத்துள்ளார். மாணவர்லோக சுதன் தொடர்பு கொள்ள 70927 78554 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
Source, Image Courtesy: News 18 Tamilnadu