Kathir News
Begin typing your search above and press return to search.

ராமநாதபுரம் லாட்ஜில் காஷ்மீர் இளைஞர்கள்! தமிழகத்தை குறி வைத்து 'ஜக்காத்' வேட்டை!

ராமநாதபுரம் லாட்ஜில் காஷ்மீர் இளைஞர்கள்! தமிழகத்தை குறி வைத்து ஜக்காத் வேட்டை!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  22 April 2022 11:00 AM IST

ராமநாதபுரம் விடுதிகளில் தங்கியிருந்த 5 ஜம்மு காஷ்மீர் இளைஞர்கள் சுற்றி வளைக்கப்பட்டனர். அவர்களுடன் 27 வட மாநிலங்களை சேர்ந்தவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

ராமநாதபுரம் நகர் விடுதிகளில் காஷ்மீர் முஸ்லிம் இளைஞர்கள் தங்கியிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததை தொடர்ந்து இந்த தேடுதல் வேட்டை நடந்தது. போலீசார் நடத்திய விசாரணையில், புது பஸ்ஸ்டாண்ட் அருகில் உள்ள விடுதிகளில் தங்கியிருந்தது, ஜம்மு-காஷ்மீர் பாரமுல்லா மாவட்டத்தை சேர்ந்த இளைஞர்கள் என்பது தெரிய வந்தது.

ரம்ஜானை முன்னிட்டு பல மாநிலங்களுக்கு சென்று 'ஜக்காத்' என்ற பெயரில் நிதி வசூல் செய்வதாவும் கூறினர். அதற்கான முறையான ஆவணங்கள், நிதி வசூல் செய்ததற்கான ரசீது புத்தகங்கள் இருந்தன.

இதனை தொடர்ந்து, பல மாநிலங்களை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர்கள் இணைந்து, ஜக்காத் வசூல் செய்ய தமிழகத்தில், இராமநாதபுரம் மாவட்டத்தை தேர்ந்தெடுத்ததில் ஏதோ உள்நோக்கம் இருக்கிறது.

தேச பாதுகாப்பு விஷயத்தில் எந்தவிதமான சமரசமும் செய்யாமல் முறையாக விசாரணை செய்ய வேண்டும் என இந்து முன்னணி சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.


Next Story
கதிர் தொகுப்பு
Trending News