Begin typing your search above and press return to search.
15 நாளில் ரேஷன் கார்டு.. ஆளுநர் உரையில் தகவல்.!
நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அனைத்து விதமான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.

By : Thangavelu
ரேஷன் அட்டைக்கு விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களுக்குள் ஸ்மார்ட் அட்டைகள் வழங்கப்படும் என்று பேரவையில் ஆளுநர் உரையில் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்துள்ளார். இன்று தமிழக சட்டப்பேரவையின் 16வது கூட்டத்தொடர் சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கியது.
முதல் கூட்டத்தொடரை ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தொடங்கி வைத்து உரையாற்றியதாவது: கொரோனா வைரஸ் தொற்று 3வஐ அலை உருவானால் அதனை சமாளிப்பதற்காக திரவ ஆக்சிஜன் உற்பத்திக்கு ரூ.50 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேலும், நீட் தேர்வால் மாணவர்கள் பாதிப்படையாமல் இருப்பதற்காக அனைத்து விதமான சட்டங்கள் நிறைவேற்றப்படும்.
அது மட்டுமின்றி விண்ணப்பிக்கும் அனைத்து நபர்களுக்கும் 15 நாட்களில் ரேஷன் கார்டு கிடைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்கும். இவ்வாறு ஆளுநர் உரையில் குறிப்பிட்டுள்ளார்.
Next Story
