டிசம்பர் மாததிற்கான ரேஷன் பொருட்கள்.. தினமும் 225 பேருக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு.!
டிசம்பர் மாததிற்கான ரேஷன் பொருட்கள்.. தினமும் 225 பேருக்கு டோக்கன் வழங்க ஏற்பாடு.!
By : Kathir Webdesk
டிசம்பர் மாதத்திற்கான ரேஷன் பொருட்களைப் பெற நாளை டோக்கன் விநியோகம் தொடங்கும் என்று பொருள் வழங்கல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக கடந்த ஏப்ரல் மாதத்தில் இருந்து தற்போது வரை ரேஷன் கடையில் பொருட்கள் வழங்க டோக்கன் முறை அறிமுகம் படுத்தப்பட்டது.
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த போதிய சமூக இடைவெளியுடன் பொதுமக்கள் ரேஷன் கடைகளில் பொருட்களை வாங்க இந்த டோக்கன் முறை எளியை£க உள்ளது. இதனை அரசு செயல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், டிசம்பர் மாத ரேஷன் பொருட்களைப் பெற நாளை டோக்கன் விநியோகம் தொடங்குகிறது. நாள் ஒன்றுக்கு 225 அட்டைகளுக்கு மிகாமல் வாடிக்கையாளர் வாங்கிக்கொள்ள ஏதுவாக டோக்கன் வழங்கப்பட வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு உணவுப் பொருள் வழங்கல் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நாளை முதல் ஒன்றாம் தேதி வரை வீடுகளுக்கே சென்று ரேஷன் கடை ஊழியர்கள் டோக்கன் வழங்குவார்கள் என்றும், 2ம் தேதி முதல் பொருட்கள் விநியோகம் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. கொரோனா தொற்று குறையும் வரை இந்த டோக்கன் முறை நடைமுறையில் இருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.