Kathir News
Begin typing your search above and press return to search.

ஒரே நாளில் 7 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கிய மத்திய அரசு.!

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து 7 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த மத்திய அரசு.

ஒரே நாளில் 7 லட்சம் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு வழங்கிய மத்திய அரசு.!

ThangaveluBy : Thangavelu

  |  22 July 2021 4:58 AM GMT

மகாராஷ்டிரா மாநிலம், புனேவில் இருந்து 7 லட்சம் கோவிஷீல்டு டோஸ் தடுப்பூசிகளை தமிழகத்திற்கு அனுப்பி வைத்த மத்திய அரசு.

தமிழகத்தில் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த 18 வயதுக்கு மேற்பட்டவர்கள் அனைவருக்கும் மத்திய அரசு இலவசமாக தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதுவரை 1 கோடியே 82 லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

இந்நிலையில், நேற்று புனேவில் இருந்து விமானம் மூலம் 5 லட்சத்தி 42 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் சென்னை வந்தடைந்தது. அனை அனைத்தும் தேனாம்பேட்டையில் உள்ள மாநில தடுப்பூசி சேமிப்பு மையத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.

மேலும், அதே விமானத்தில் 13 பெட்டிகளில் 1 லட்சத்தி 56 ஆயிரம் கோவிஷீல்டு தடுப்பூசிகள் மத்திய தொகுதிப்பிற்காக பெரிய மேட்டில் உள்ள மத்திய கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது. இவை அனைத்தும் அந்தந்த மாவட்டங்களுக்கு பிரித்து அனுப்பப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News