Kathir News
Begin typing your search above and press return to search.

'அதிகாரமிக்க குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து 10 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு தாருங்கள்' - தேனி விவசாயிகள் கவலை

'அதிகாரம் மிக்க குடும்பத்தின் ஆதிக்கத்தில் 10 லட்சம் ஏக்கர் விவசாய மாட்டியுள்ளது' என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.

அதிகாரமிக்க குடும்பத்தின் ஆதிக்கத்திலிருந்து 10 லட்சம் ஏக்கர் நிலத்தை மீட்டு தாருங்கள் - தேனி விவசாயிகள் கவலை
X

Mohan RajBy : Mohan Raj

  |  21 Oct 2022 7:14 PM IST

'அதிகாரம் மிக்க குடும்பத்தின் ஆதிக்கத்தில் 10 லட்சம் ஏக்கர் விவசாய மாட்டியுள்ளது' என விவசாயிகள் சங்க தலைவர் பி.ஆர்.பாண்டியன் கூறியுள்ளார்.


தேனி மாவட்டம் கம்பம் பள்ளத்தாக்கு உட்பட்ட சின்னமனூர் சுற்றுவட்டாரத்தில் மேடான வறண்ட பகுதிகளுக்கு தண்ணீர் கொண்டு செல்ல அமைக்கப்பட்டிருந்த குழாய்கள் அகற்றப்பட்டன. இது தொடர்பாக சின்னமனூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தமிழக அனைத்து விவசாயிகளின் கூட்டமைப்பு சங்கங்கள் ஒருங்கிணைப்பு குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் தலைமையில் விவசாயிகள் கருத்தரங்க கூட்டம் நடைபெற்றது. முன்னதாக குழாய் உடைக்கப்பட்ட இடங்களை பி.ஆர் பாண்டியன் நேரில் சென்று பார்வையிட்டார் அங்கு போலீசார் அனுமதி மறுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அவர்களை போலீசார் கைது செய்து பின்னர் விடுவித்தனர்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த பி.ஆர்.பாண்டியன் தமிழக நீர் பாசன துறை ஒப்புதலோடு தேனி மாவட்டம் சின்னமனூர் சுற்றுவட்டாரத்தில் மேடான பகுதிகளுக்கு குழாய்கள் மூலம் தண்ணீர் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இதனால் வறண்ட பகுதிகள் பசுமையாக மாறி உள்ளன ஆனால் தேனி மாவட்டம் மட்டுமன்றி முல்லைப் பெரியாறு பாசன பகுதிகளில் ஆங்கிலேயர்களால் கொடுக்கப்பட்டதாக கூறி 10 லட்சம் ஏக்கர் நிலத்தில் அதிகாரமிக்க பெரிய குடும்பம் ஒன்று ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அவர்களின் சுய லாபத்திற்காக அனுமதி இன்றி குழாய்கள் பதித்ததாக நீதிமன்றத்தை தொடரப்பட்ட வழக்கில் குழாய் மூலம் தண்ணீர் கொண்டு செல்ல நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. மேலும் இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ள நிலையில் நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் பரிந்துரையில் மாவட்ட ஆட்சியர் உத்தரவில் தற்போது குழாய்களை அகற்றி உள்ளனர்.

இது அரசு மற்றும் நீதிமன்றத்தின் உத்தரவை மீறும் செயலாகும் எனவே தமிழக முதல்வர் கம்பம் பள்ளத்தாக்கு விவசாயிகளின் நலனில் அக்கறை செலுத்த வேண்டும். தவறும் பட்சத்தில் நவம்பர் 1ம் தேதி காந்தி சாலையில் இருந்து மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் நீதி கேட்கும் போராட்டம் நடத்த இருக்கிறோம். நீதி கேட்கும் பயணத்தில் விவசாய தொழிலாளர்களுக்கு உபரி மற்றும் தரிசு நிலங்களை வழங்குவோம் என்ற கொடுத்த தேர்தல் வாக்குறுதியின் அடிப்படையில் அதிகாரமிக்க குடும்பத்தின் பினாமி பெயர்களில் உள்ள நிலங்களை மீட்டு ஏழை விவசாயிகளுக்கு பிரித்து தர வேண்டும்' என்ற கோரிக்கையும் விடுத்தார்.



Source - Junior Vikatan

Next Story
கதிர் தொகுப்பு
Trending News