20 லட்சத்திற்கும் கீழ் குறைந்த அரசு கேபிள் டி.வி வாடிக்கையாளர்: குடும்ப நலனுக்காக முடக்கபட்டு விட்டதா?
தி.மு.க ஆட்சியில் 20 லட்சத்திற்கும் கீழ் குறைந்த அரசு கேபிள் டி.வி வாடிக்கையாளர்கள்.
By : Bharathi Latha
தமிழக கேபிள் டி.வி 70 லட்சம் வாடிக்கையாளர்களுடன் கடந்த ஆட்சியில் சிறப்பாக செயல்பட்டு வந்த நிலையில் தி.மு.க ஆட்சியில் 20 லட்சத்திற்கும் கீழ் குறைந்து இருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறத. 20 லட்சம் வாடிக்கையாளர் எண்ணிக்கை குறைத்து எப்படியாவது அரசு கேபிள் முடக்க வேண்டும் என்று ஒரு நோக்கத்துடன் தான் தி.மு.க செயல் பட்டதாகவும் குற்றச்சாட்டப்படுகிறது.
குறைந்த கேபிள் கட்டணத்தில் ஏழை எளிய மக்கள் அரசு கேபிள் டி.வி மூலமாக பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளை கண்டு களித்து வந்தார்கள். ஆனால் அரசு கேபிள் டிவி நிர்வாகத்தின் திறமையின்மை, தொழில்நுட்பக் கோளாறு போன்றவற்றின் காரணமாக சுமார் 20 லட்சம் வாடிக்கையாளர்கள் இதிலிருந்து தற்போது வெளியேறி தனியார் கேபிள் நிறுவனத்திடம் இணைந்து இருக்கிறார்கள்.
ஒருவேளை தி.மு.க தங்களுடைய குடும்ப நலனுக்காக அரசு கேபிள் முடக்கி விட்டு தனியார் கேபிள் நிறுவனங்களுக்கு ஆதரவு கொடுக்கிறதா?. அரசு கேபிள் கார்ப்பரேஷன் நிறுவனத்தை நம்பு ஏராளமானவர்கள் தற்பொழுது கைவிடப்பட்டு இருக்கிறார்கள். பல்வேறு அரசு கேபிள் நிறுவனத்தின் நம்பி ஒதுங்கி செய்தும் நபர்கள் தற்பொழுது நடுத் தெருவில் நிற்கிறார்கள்.
Input & Image courtesy: J News