Kathir News
Begin typing your search above and press return to search.

இனிமேல் உயர்ந்த இடம் இல்லை.. பதிவு அலுவலர்களும் கீழேதான்.. அமைச்சர் போட்ட புது உத்தரவு.!

திருமண பதிவு மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் உயர்ந்த மேடை அமைத்து அதன்மீது டேபிள், இருக்கைள் அமைத்து அமர்ந்து வந்தனர். அவர்களை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டிருக்கும்.

இனிமேல் உயர்ந்த இடம் இல்லை.. பதிவு அலுவலர்களும் கீழேதான்.. அமைச்சர் போட்ட புது உத்தரவு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 July 2021 4:54 PM IST

திருமண பதிவு மற்றும் பத்திரப்பதிவு அலுவலகங்களில் சார்பதிவாளர்கள் உயர்ந்த மேடை அமைத்து அதன்மீது டேபிள், இருக்கைள் அமைத்து அமர்ந்து வந்தனர். அவர்களை சுற்றிலும் கூண்டு அமைக்கப்பட்டிருக்கும்.

ஆனால் மற்ற அலுவலர்கள் சமதளத்தில்தான் அமர்ந்து தங்களின் பணிகளை செய்து வருவார்கள். உயர்ந்த இடங்களில் அமர்ந்து கொண்டு பதிவாளர்கள் பொதுமக்களிடம் இருந்து தள்ளியே இருப்பார்கள். இந்த சம்பவத்தால் பல்வேறு பொதுமக்கள் தங்களின் குறைகளை நேரடியாக பதிவாளரிடம் தெரிவிக்க முடியாமல் இருந்து வந்தனர்.

இந்நிலையில், சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திரப்பதிவு அலுவலர்கள் உயர்ந்த மேடையில் அமரக்கூடாது எனவும், கூண்டுகளை உடனடியாக அகற்ற வேண்டும் என்று அத்துறையின் அமைச்சர் மூர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

மற்றவர்களை போன்று சமதளத்தில் அமர்ந்து தங்களின் பணிகளை செய்ய வேண்டும். அப்போதுதான் பொதுமக்களிடம் நேரடியாக குறைகளை கேட்க முடியும் என கூறியுள்ளார்.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News