அரசு ஆவணங்களில் இருந்து காருண்யா நகர் பெயரை நீக்குங்க: பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு.!
அரசு ஆவணங்களில் இருந்து காருண்யா நகர் பெயரை நீக்குங்க: பழங்குடியின மக்கள் ஆட்சியரிடம் மனு.!
By : Kathir Webdesk
அரசு ஆவணங்களில் உள்ள காருண்யா நகர் பெயரை உடனே நீக்க வேண்டும் என பழங்குடி மக்கள் கோவை மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர்.
கோவை மாவட்ட ஆட்சியர் ராஜாமணியை சந்தித்து பழங்குடியின மக்கள் மனு அளித்துள்ளனர். அவர்கள் அளித்துள்ள மனுவில், மத்வராயபுரம் ஊராட்சி, நல்லூர் வயல் கிராமத்தில் பல வருடங்களாக வசித்து வருகிறோம். கடந்த 1986ம் ஆண்டு காருண்யா கல்லூரி நல்லூர்வயலில் துவங்கப்பட்டது.
அந்த சமயத்தில் அந்த இடம் மட்டும், காருண்யா நகர் என்ற ஒரு தெருவாக இருந்தது. தற்போதும் அரசு இதழ்களில் காருண்யா நகர் என்றே உள்ளது. இதன் பின்னர் எங்கள் பாரம்பரிய கிராமத்தின் பெயரை காருண்யா நிர்வாகம் மாற்ற ஆரம்பித்தது. மத்திய அரசின் கீழ் செயல்படும் காருண்யா நகர் என பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
நல்லூர்வயல் என்ற கிராமத்தின் பெயரையே காருண்யா நகர் என மாற்றி விட்டனர். எங்கள் கிராமத்தில உள்ள மக்களின் ஆதார் மற்றும் வாக்காளர் அட்டை உள்ளிட்ட அரசு ஆவணங்களில் காருண்யா நகர் என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. எங்களின் பாரம்பரியமிக்க அடையாளங்களை இழந்து விட்டோம். எனவே மீண்டும் பழைய மாதிரி அரசு ஆவணங்களிலும் நங்கநல்லூர்வயல் என்ற பெயரை இருக்க வேண்டும் என தங்களின் மனுவில் பொதுமக்கள் குறிப்பிட்டுள்ளனர்.