கொரோனா சிகிச்சை மையம் தொடங்க ஓட்டல் உரிமையாளர்களுக்கு அழைப்பு.!
சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள், உணவகங்களில் கொரோனா சிகிச்சை மைய தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
By : Thangavelu
சென்னையில் தனியார் மருத்துவமனைகள், உணவகங்கள் கொரோனா சிகிச்சை மையம் தொடங்கலாம் என்று சென்னை மாநகராட்சி கூறியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று அதிகரித்து வரும் சூழலில், பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு எடுத்து வருகிறது. இதில் சென்னையில் தினசரி பாதிப்பாக 4,000 ஆயிரத்தை கடந்து செல்கிறது. இதனால் அரசு மற்றும் தனியார் மருத்துவனைகளில் மக்கள் அதிகளவு செல்வதால் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இந்நிலையில், சென்னையில் தொற்று அதிகரித்து வருவதால், தனியார் மருத்துவமனைகள், உணவகங்களில் கொரோனா சிகிச்சை மைய தொடங்கலாம் என்றும், அதற்காக மாநகராட்சியிடம் அனுமதி பெறத் தேவையில்லை எனவும் கூறப்பட்டுள்ளது.
தனியார் ஓட்டல்கள், மருத்துவமனைகள் மாநகராட்சிக்கு தகவல் அளித்துவிட்டு கொரோனா மையம் தொடங்கலாம் என சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் தெரிவித்துள்ளார். கொரோனா மையம் அமைப்பவர்கள் மாநகராட்சி அதிகாரிக்கு இமெயில் மட்டும் அனுப்பினால் போதுமானது என்று ஆணையர் பிரகாஷ் கூறியுள்ளார்.