தமிழக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆர்.எம்.ஓ வசதி இல்லையா?
21 இருக்கும் மேற்பட்ட அரசு மருத்துவக் கல்லூரிகளில ஆர்.எம்.ஓ வசதி இல்லாததால் மருத்துவ செயல்பாடுகள் பெரும் கேள்விக்குறியாகி இருக்கிறது.
By : Bharathi Latha
தமிழகத்தில் 21 அரசு மருத்துவக் கல்லூரிகளில் குறிப்பாக ஆர்.எம்.ஓ என்ற செய்தி இல்லாதது பெரும் அதிர்ச்சியில் ஏற்படுத்தி இருக்கிறது. ஆர்.எம்.ஓ என்று அழைக்கப்படும் உள் தங்கும் மருத்துவ அலுவலர் இல்லாததால் மருத்துவமனை செயல்பாடுகள் பெரும் கேள்விக்குறியை எழுப்பி இருக்கிறது. சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, நாமக்கல், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களை சேர்ந்த மக்கள் பயன்படுத்துகிறார்கள். தினமும் நான்காயிரத்திற்கும் மேற்பட்ட வெளிப்புற நோயாளிகள், 2,500-க்கும் மேற்பட்ட உட்புற நோயாளிகள் அங்கே சிகிச்சை பெறுகின்றார்கள். இதனால் 24 மணி நேரமும் அங்கு மக்கள் நடமாட்டம் இருக்கத்தான் செய்கிறது.
இந்நிலையில் மருத்துவமனையில் வழிநடத்தும் தலையாகிய பணி ஆர்.எம்.ஓ என்ற பணி. அதற்கு உரிய பணியாற்றும் மருத்துவர்கள் முதல் ஊழியர்கள் வரை அனைவரின் வருகை பதிவேட்டை உறுதி செய்யும் செயல்பாடு, விடுப்பு எடுக்கும் நபர்களின் செயல்பாடு ஆகியவற்றை டினுக்கு அடுத்து மருத்துவமனையின் முழு கடமைகளையும் வழிநடத்தும் ஒரு பொறுப்பு RMO-க்கு உண்டு. ஆனால் சேலத்தில் இருந்து மாற்றப்பட்ட நிலையில் பொறுப்பு RMOவாக பணியாற்றிய குழந்தை சிகிச்சை துறை தலைவர் சம்பத் குமார் பதவியில் இருந்து விலகியதால் அந்த பதவி தற்போது காலியாக இருக்கிறது.
இதனால் பணியை கூடுதல் RMOவாக வினோத்குமார் இடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.எம்.ஓ என்பது டென்ஷனான பணி. மருத்துவர்கள் கூறுகையில், ஆரம்ப பணி என்பது மருத்துவ கல்லூரி மருத்துவமனை வளாகத்திற்குள் தங்கி 24 மணி நேரமும் கண்காணிக்க வேண்டியது. ஆனால் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் குடியிருப்பு வசதி இல்லை. இது குறித்து அரசருக்கு பலமுறை செய்தி அனுப்பப்பட்ட பிறகு தற்போது வரை விடை கிடைக்கப் பெறவில்லை. பெரும்பாலான சுமார் 21 தமிழக அரசு மருத்துவக் கல்லூரிகளில் ஆர்.எம்.ஓ பணியிடம் காலியாக இருப்பது மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
Input & Image courtesy: Dinamalar