Kathir News
Begin typing your search above and press return to search.

நாடு முழுவதும் 75 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் - மத்திய நிதியமைச்சர்!

நாடு முழுவதும் 75 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் சென்னையில் நடந்த நிகழ்ச்சியில் 250 பேருக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிய மத்திய அமைச்சர்.

நாடு முழுவதும் 75 இடங்களில் வேலை வாய்ப்பு முகாம் - மத்திய நிதியமைச்சர்!
X

Bharathi LathaBy : Bharathi Latha

  |  23 Oct 2022 11:39 PM GMT

மதிய அரசாங்கத்தின் அனைத்து துறைகளிலும் அடுத்த ஒன்றரை ஆண்டுகளில் 10 லட்சம் பேருக்கு வேலைக்கு தேர்வு செய்யப்பட இருப்பதாக கடந்த ஜூன் மாதத்தில் பிரதமர் மோடி அறிவித்தார். அதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் 75 இடங்களில் 75 ஆயிரத்து 2526 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கும் "ரோஸ்கர் மேளா 2022" என்ற பெயரில் முதல் கட்ட வேலை வாய்ப்பு முகாம் நேற்று நடத்தப்பட்டது. இதில் பிரதமர் மோடி காணொளி காட்சி வழிலாக தொடங்கி வைத்தார்.


தமிழகத்தில் சென்னை கோவையில் இந்த வேலை வாய்பு முகாம் நடத்தப்பட்டது. சென்னை அய்யனாவரம் நெடுஞ்சாலையில் உள்ள அம்பேத்கர் அரங்கத்தில் நேற்று நடந்த இந்த முகாமிற்கு மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தலைமை தாங்கினார். இதில் கலந்துகொண்டு பணி ஆணைகள் பெற வந்தவரிடம் மத்தியில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கலந்துரையாடினார். இதனைத் தொடர்ந்து 245 பேருக்கு மத்திய அரசு துறைகளில் உள்ள பணியிடங்களில் சேர்வதற்கு நியமன ஆணை வழங்கப்பட்டன.


இதில் 25 பேருக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேரடியாக வழங்கினார் மற்றும் 230 பேருக்கு அந்தந்த துறை சார்ந்த அதிகாரிகள் வழங்கினார்கள். அதிகபட்சமாக தெற்கு ரயில்வே துறையில் கீழ்வரும் 85 இடங்களில், அடுத்த அடுத்த படியாக காவல் கடலோர காவல் படை பணியில் 52 இடங்களும், பணியாளர் மாநில காப்பீட்டு நிறுவனத்தில் 25 பணியிடங்களும், சுங்கம் மற்றும் ஜிஎஸ்டி 18 இடங்களும், இந்திய வங்கியின் 17 இடங்களிலும், வருமான வரித்துறையில் 15 இடங்களிலும் என ஒட்டுமொத்தமாக 255 இடங்கள் நிரப்பப்பட்டு இருக்கின்றன. இந்த 255 பணியிடங்களில் 85 சதவீதம் இடங்களில் தமிழர்களை இடம் பெற்று இருக்கிறார்கள். மீதமுள்ள பணிகளில் ஆந்திரா உத்தர பிரதேசம் மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்களை சேர்ந்தவர்களும் உள்ளனர்.

Input & Image courtesy: News

Next Story
கதிர் தொகுப்பு
Trending News