ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் ! வேளாண் பட்ஜெட்டில் அறிவிப்பு !
தமிழக சட்டசபையில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
By : Thangavelu
தமிழக சட்டசபையில் முதன் முறையாக வேளாண் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் 273 பக்கங்கள் கொண்ட வேளாண் பட்ஜெட்டை அத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தார்.
அப்போது ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும். ரேஷன் கடைகளில் பனை பொருட்கள் விற்பனை செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.
பனை மரங்களை அதிகரிக்க 76 லட்சம் பனை விதைகள் மானியத்தில் வழங்கப்படும். மேலும், பனைமரங்களை வெட்ட மாவட்ட ஆட்சியரின் அனுமதி கட்டாயம் தேவை. பனங்கருப்பட்டி காய்ச்சும் நவீன இயந்திரம் கொள்முதல் செய்வதற்கு மானியம் வழங்கப்படும்.
அது மட்டுமின்றி ரூ.3 கோடியில் பனை மேம்பாட்டு இயக்கம் செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார். இந்த அறிவிப்புக்கு பனை விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.
Source: Dailythanthi
Image Courtesy: Pasumai Tamilagam
https://www.dailythanthi.com/News/TopNews/2021/08/14111624/Rs-3-crore-palm-development-movement--MRK-Panneerselvam.vpf