மசூதிகள், தேவாலயங்களைப் புதுப்பிக்க தலா ரூ.6 கோடி நிதி ஒதுக்கீடு !
தமிழகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
By : Thangavelu
தமிழகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
தமிழக பட்ஜெட் இன்று தொடங்கியது. இதில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்து பேசியதாவது:
தமிழகத்தில் உள்ள மசூதிகள் மற்றும் தேவாலயங்களை புதுப்பிக்க தலா ரூ.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலனுக்கான ஒட்டு மொத்த நிதி ஒதுக்கீடு 4,142 ஆக உயர்த்தப்படுகிறது.
கொரோனாவால் பெற்றோரை இழந்த 5963 குழந்தைகளுக்கு ரூ.95 கோடி நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது.
அங்கன்வாடி மையங்களின் தரத்தை உயர்த்த சிறப்பு ஒதுக்கீடாக ரூ.48 கோடி.
Source: News 7
Image Courtesy:News 7 Tamil
https://news7tamil.live/rs-6-crore-each-will-be-allocated-for-the-renovation-of-mosques-and-churches.html