மனைவி வங்கி கணக்கில் ரூ.4 கோடி.. மதனை புகழ்ந்து பேசும் பெண்களுக்கு ரூ.5 லட்சம்.. பரபரப்பு தகவல்.!
யூடியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவும் யூடியூபில் ஆபாசமாக பேசி கிட்டத்தட்ட ரூ.4 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.

By : Thangavelu
தேடப்பட்டு வந்த ஆபாச பேச்சு யூடியூபர் மதனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்தியாவில் தடை செய்யப்பட்ட பப்ஜி விளையாட்டு யூடியூப்பில் லைவ் ஸ்ட்ரீமிங் செய்து அதன் மூலம் விளையாடி வந்த மதன், சிறுவர் மற்றும் சிறுமிகளிடம் ஆபாசமாக பேசி வந்ததாக 100க்கும் மேற்பட்ட புகார்கள் காவல்துறைக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக போலீசார வழக்குப்பதிவு செய்து தலைமறைவான மதனை தேடி வந்தனர். இதனிடையே மதனின் மனைவி கிருத்திகாவை போலீசார் கைது செய்து புழல் சிறையில் அடைத்துள்ளனர். யூடியூப் சேனலின் நிர்வாகியாக செயல்பட்டு வந்துள்ளார் என தெரியவந்துள்ளது.
இந்நிலையில், போலீசாருக்கு தண்ணீர் காட்டி வந்த மதனை இன்று போலீசார் தருமபுரியில் கைது செய்தனர். இந்நிலையில், யூடியூபர் மதன் மற்றும் அவரது மனைவி கிருத்திகாவும் யூடியூபில் ஆபாசமாக பேசி கிட்டத்தட்ட ரூ.4 கோடி வரை சம்பாதித்துள்ளனர்.
தற்போது மதன் மனைவி கிருத்திகா வங்கிக் கணக்கில் இருப்பதாக போலீசார் தெரிவித்துள்ளனர். அது மட்டுமின்றி இரண்டு சொகுசு கார்களையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். தன்னை புகழந்து பேசடும், திட்டவும் ரூ.5 ஆயிரம் முதல் ரூ.5 லட்சம் வரை சம்பளம் கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது. தற்போது பெண்கள் குரலில் பேசிய அவரது தோழிகளையும் போலீசார் தேடி வருகின்றர். விரைவில் இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் கைது செய்யப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
