அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.!
அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்ட சகாயம் ஐ.ஏ.எஸ்.!

ஐஏஎஸ் அதிகாரி சகாயம் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் விருப்ப ஓய்வு கேட்டு விண்ணப்பித்திருந்தார். அவரது கோரிக்கையை ஏற்று தற்போது அவர் அரசு பணியில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
புதுக்கோட்டையை சேர்ந்தவர் சகாயம், கடந்த ஆண்டு 2001-ம் ஆண்டு தமிழகப் பிரிவு ஐ.ஏ.எஸ்., அதிகாரியாக பதவியேற்றார். பின்னர் பல மாவட்டங்களில் ஆட்சியராக பணிபுரிந்தார்.
மதுரை மாவட்ட ஆட்சியராக இருந்தபோது கிரானைட் ஊழலை வெளிப்படுத்தினார். தற்போது கடந்த 6 ஆண்டுகளாக தமிழ்நாடு அறிவியல் நகர துணைத் தலைவராக பதவி வகித்து வருகிறார். மேலும், மக்கள் பாதை என்ற அமைப்புடன் இணைந்து சமூக சேவையும் செய்து வருகிறார்.
அரசு பதவியிலிருந்து ஓய்வு பெறுவதற்கு இன்னும் 3 ஆண்டுகள் உள்ள நிலையில் 57 வயதிலேயே விருப்ப ஓய்வு கேட்டு கடந்த ஆண்டு அக்டோபர் 2ம் தேதி தமிழக அரசிடம் கடிதம் அளித்திருந்தார். விருப்ப ஓய்வு கேட்டு 3 மாதங்கள் கடந்த நிலையில், சகாயம் அரசு பதவியிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.