Kathir News
Begin typing your search above and press return to search.

சேலம்: நடுரோட்டில் போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு.. கிராம மக்கள் ஒன்று சேர்ந்ததால் பரபரப்பு.!

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் தாக்கியதில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சேலம்: நடுரோட்டில் போலீசார் தாக்கியதில் வியாபாரி உயிரிழப்பு.. கிராம மக்கள் ஒன்று சேர்ந்ததால் பரபரப்பு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  23 Jun 2021 12:28 PM IST

சேலம் மாவட்டம், வாழப்பாடி அருகே எடப்பட்டி சோதனைச்சாவடியில் போலீசார் தாக்கியதில் வியாபாரி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

வியாபாரத்திற்காக சென்றவரை போலீசார் தடுத்து நிறுத்தி சோதனை என்ற பெயரில் அத்துமீறியுள்ளனர். வாழப்பாடியில் மளிகைக்கடை வைத்திருப்பவர் முருகேசன். இவர் நேற்று வியாபார ரீதியாக வெளியூர் சென்றுவிட்டு மீண்டும் ஊர் திரும்பியுள்ளார்.

அப்போது சோதனை சாவடியில் போலீசார் தடுத்து நிறுத்தி அவரை சராமாரியாக தாக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது. படுகாயமடைந்து மயக்க நிலையில் சாலையில் சுருண்டு விழுந்துள்ளார். உடன் வந்தவர் எவ்வளவு சொல்லியும் கேட்காமல் போலீசார் முருகேசனை சராமாரியாக தாக்கியுள்ளனர். இதனையடுத்து முருகேசனை சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவத்துக்கு காரணமான போலீசார் மீது கொலை வழக்குப்பதிவு செய்தால் மட்டுமே உடலை பெற்று செல்வோம் என உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் 500க்கும் மேற்பட்டோர்கள் குவிந்தால் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. நிலைமையை சமாளிக்க ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். வியாபாரியை போலீசார் அடித்துக்கொன்ற சம்பவம் சேலம் மாவட்டத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News