Begin typing your search above and press return to search.
நாட்டிலேயே 2வது இடத்தை பிடித்த சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்.. மத்திய அரசு வெளியீடு.!
நாட்டிலேயே 2வது இடத்தை பிடித்த சேலம் சூரமங்கலம் காவல் நிலையம்.. மத்திய அரசு வெளியீடு.!
By : Kathir Webdesk
நாடு முழுவதும் சிறந்த காவல் நிலையங்களை தேர்வு செய்து மத்திய அரசு பரிசு வழங்குவது வழக்கம். இந்நிலையில், இந்த ஆண்டுக்கான நாட்டின் சிறந்த காவல் நிலையத்திற்கான டாப் 10 பட்டியலை மத்திய உள்விவகார அமைச்சகம் இன்று வெளியிட்டு உள்ளது.
இதில் முதல் இடம் மணிப்பூர் மாநிலத்தின் தவுபால் நகரில் உள்ள நாங்போக் செக்மாய் காவல் நிலையத்திற்கு கிடைத்து உள்ளது. இதேபோன்று தமிழகத்தின் சேலம் மாநகரில் உள்ள சூரமங்கலம் காவல் நிலையம் 2வது இடத்தை பிடித்துள்ளது.
இந்த பட்டியலில் மற்றொரு வடமாநிலங்களில் ஒன்றான அருணாசல பிரதேசத்தில் உள்ள சங்லாங் நகரில் உள்ள கர்சாங் காவல் நிலையம் 3வது இடத்தை பிடித்துள்ளது. இந்த பரிசு தமிழக அரசுக்கு கிடைத்த மேலும் ஒரு அங்கீகாரம் ஆகும்.
Next Story