சேலத்தில் மீண்டும் தொடங்கியது தடுப்பூசி போடும் பணி.!
சேலம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

By : Thangavelu
சேலம் மாவட்டத்தில், கொரோனா வைரஸ் தொற்று பரவலை தடுக்கும் வகையில், 100க்கும் மேற்பட்ட மையங்கள் மூலமாக பொதுமக்களுக்கு தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று சென்னையில் இருந்து தடுப்பூசி வருகையால், இன்று மீண்டும் தடுப்பூசி போடும் பணிகள் துவங்கியுள்ளது. மாவட்டத்தில் 138 மையங்களில் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
இன்று 2,880 பேருக்கு 2வது தவணை கோவாக்சின் தடுப்பூசியும், 50,700 பேருக்கு கோவிஷீல்டு முதல் மற்றும் இரண்டாம் தவணை தடுப்பூசியும் மற்றும் 1,800 மாற்றுத்திறனாளிகளுக்கு கோவிஷீல்டு தடுப்பூசியும் என மொத்தம் 55 ஆயிரத்து 380 பேருக்கு தடுப்பூசி போட சுகாதாரத்துறை ஏற்பாடு செய்துள்ளது.
கடந்த 3 நாட்களுக்கு பின்னர் தடுப்பூசி போடும் பணிகள், சேலம் மாவட்டம் முழுவதும் துவங்கியிருப்பதால் அதிகாலை முதலே பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.
