சலூன் கடைகள் இன்றும், நாளையும் இயங்க தமிழக அரசு அனுமதி.!
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சலூன் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், (மே 8, 9ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக சலூன் கடைகள் இயங்குவதற்கு தமிழக அரசு தடை விதித்திருந்த நிலையில், (மே 8, 9ம் தேதி) ஆகிய இரண்டு நாட்கள் இயங்குவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் விதமாக மே 10ம் தேதி முதல் மே 24ம் தேதி வரை முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என தமிழக அரசு அறிவித்தது. இதனையடுத்து தற்போது இருந்தே சென்னையில் இருந்து வெளியூர் செல்வதற்கு கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் குவிந்து வருகின்றனர்.
இதனிடையே, சலூன் கடைகளில் பணியாற்றும் தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அரசுக்கு கோரிக்கை வைத்திருந்தனர். கடைகளை திறப்பதற்கு அரசு உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கையாக வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்ற தமிழக அரசு இன்றும், நாளையும் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்கியுள்ளது.