குறைந்த நேரம்மாவது கடை திறக்க அனுமதி கொடுங்கள்.. முடித்திருத்துவோர் மனு.!
அதன்படி, மால், அழகு நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

By : Thangavelu
தமிழகத்தில் கொரோனா வைரஸ் தொற்றின் 2வது அலை மிக தீவிரம் அடைந்துள்ளது. இதனால் அச்சுறுத்தி வரும் தொற்று நோயை தடுக்கும் விதமாக மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், தமிழக அரசும் பல்வேறு வகையிலான கட்டுப்பாடுகளையும் அறிவித்துள்ளது. அதன்படி, மால், அழகு நிலையங்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் திறப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தமிழகம் முழுவதும் அழகு நிலையங்களை திறக்க அனுமதி வழங்கக்கோரி பல்வேறு பகுதிகள் மனு அளிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், தமிழ்நாடு சவரத் தொழிலாளர் சங்கத்தின் சார்பில், முடிதிருத்தும் கடைகளை திறக்க அனுமதி வழங்க வேண்டும். குறைந்தபட்சம் 6 மணி நேரம் கடைகளை திறந்த வைப்பதற்கு தமிழக அரசு அனுமதி வழங்க வேண்டும் என்று வலியுறுத்தி, சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
இது தொடர்பாக தொழிலாளர்கள் கூறும்போது: முடித்திருத்தும் கடைகள் மூலம் கொரோனா தொற்று பரவியதாக எங்கும் தகவல் இல்லை. எனவே தமிழக அரசு எங்களுடைய வாழ்வாதாரத்தை பாதுகாக்கும் வகையில், முடிதிருத்தும் கடைகளை திறப்பதற்கு அனுமதி வழங்க வேண்டும் எனக்கூறினர்.
