Begin typing your search above and press return to search.
சாத்தூர் பட்டாசு வெடி விபத்து: நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!
சாத்தூர் பட்டாசு வெடி விபத்து: நிவாரண உதவிகளை வழங்கிய அமைச்சர் ராஜேந்திர பாலாஜி.!

By :
விருதுநகர் மாவட்டம், சாத்தூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட அச்சங்குளம் கிராமத்தில் உள்ள பட்டாசு ஆலை கடந்த 12ம் தேதி வெடித்து சிதறியது. இதில் தீக்காயங்களுடன் 20க்கு மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்னும் சிலர் மருத்துவனையில் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.
உயிரிழந்த குடும்பங்களுக்கு மத்திய, மாநில அரசுகள் நிவாரணம் அறிவித்தது. அதன்படி தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தி நிவாரண நிதியிலிருந்து உயிரிழந்தவர்களின் குடும்பத்தாரிடம் தலா 3 லட்சம் வீதம் நிவாரணத்தொகைகளை பால்வளத் துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி வழங்கினார்.
இந்த நிகழ்வின்போது மாவட்ட ஆட்சித் தலைவர் கண்ணன், சாத்தூர் எம்.எல்.ஏ., எம்.எஸ்.ஆர் ராஜவர்மன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்
Next Story