Begin typing your search above and press return to search.
மீண்டும் தள்ளிப் போகிறதா பள்ளி, கல்லூரிகள் திறப்பு : கோர்ட் சொன்ன அறிவுரை.!

By : Rama Subbaiah
கொரோனா பரவலை தடுப்பதற்காக கடந்த மார்ச் மாதம் முதல் நாடு முழுவதும் பள்ளி, கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்கள் மூடப்பட்டன. பொது முடக்கத்தில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்ட நிலையில், பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு எப்போது என்பதே தொடர்ந்து எழுப்பப்படும் கேள்வியாக இருந்தது.
இந்நிலையில், தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் சூழல் உள்ளது எனக் கூறிய தமிழக அரசு அவரும் நவம்பர் 16 ஆம் தேதி முதல் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என்று சென்ற வாரம் அறிவித்தது.
ஆனால் மாணவர்களின் நலனில் அரசுக்கு அக்கறை இல்லையா என்று எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு குறித்து வரும் 9ஆம் தேதி 12 ஆயிரம் பள்ளிகளில் கருத்துக்கேட்பு கூட்டம் நடக்கும் என அரசு அறிவித்துள்ளது. பள்ளி தலைமையாசிரியர் தலைமையில் நடக்கும் கருத்துக் கேட்புக் கூட்டத்தில் பெற்றோர் கருத்துகளை கூறலாம் என்றும் கூறியுள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் பள்ளிகள் திறப்பு குறித்து நடத்தப்பட்ட கருத்துக் கணிப்பில் தமிழகம் முழுவதும் 45 சதவீத பெற்றோர்கள் மட்டுமே கலந்துகொண்டதாக தெரிவித்தார். பெற்றோர்களின் கருத்துகள் கேட்கப்பட்டு உள்ளதாகவும், இது குறித்து நாளை முதல்வர் ஆலோசனை செய்து பள்ளிகள் திறப்பு குறித்து அறிவிப்பார் என்றும் கூறினார்.
இந்நிலையில், தமிழகத்தில் டிசம்பருக்கு பின் பள்ளி, கல்லூரிகளை திறக்கலாமே? என்று மதுரை உயர்நீதிமன்ற கிளை கேள்வி எழுப்பியுள்ளது. பிற மாநிலங்களில் நிகழ்ந்தவற்றை கருத்தில் கொண்டு தமிழக அரசு முடிவெடுக்க வேண்டும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
பெரும்பாலான பெற்றோர் பள்ளி, கல்லூரிகளை திறக்க எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. நவம்பர் 16ல் பள்ளி, கல்லூரிகளை திறப்பதற்கு எதிரான வழக்கை நவம்பர் 20க்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனர்.
டிசம்பருக்கு பின் திறப்பது என்பது நீதிமன்ற கருத்தே; ஆனால் அரசு சிறந்த முடிவெடுக்கும் என்று தங்கள் நம்புவதாக நீதிபதிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். பள்ளிகள் திறக்கப்பட்டு குழந்தைகள் பாதிக்கப்பட்டால் அதிக சிரமம் ஏற்படும் என்றும் உயர்நீதிமன்ற கிளை நீதிபதிகள் கூறியுள்ளனர்.

Next Story