Kathir News
Begin typing your search above and press return to search.

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு.!

தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவர்.

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் வெளியீடு.!
X

ThangaveluBy : Thangavelu

  |  21 Jun 2021 5:45 PM IST

பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் காலவரையின்றி மூடப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மாணவர்களும் தேர்வு எழுதாமல் தேர்ச்சி பெற்றதாக தமிழக அரசு அறிவித்தது.

இதனை தொடர்ந்து புதிய வகுப்புகளில் சேருவதற்கு மாணவர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர். இதனால் பள்ளிகள் அனைத்து திறக்கப்பட்டு புதிய வகுப்பிற்கான சேர்க்கை நடைபெற்று வருகிறது.




இந்நிலையில், பள்ளிக்குழந்தைகள் பாதுகாப்பு நெறிமுறைகள் குறித்து வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி, மாணவர் பாதுகாப்பை மேற்பார்வை செய்ய பள்ளிகளில் மாணவர் பாதுகாப்பு ஆலோசனைக்குழு அமைக்கப்படும்.

தலைமை ஆசிரியர், 2 ஆசிரியர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக உறுப்பினர்கள் குழுவில் இடம்பெறுவர்.

பள்ளி நிர்வாக உறுப்பினர் ஒருவர், ஆசிரியர் அல்லாத பணியாளர் ஒருவர் குழுவில் இடம்பெற்றிருப்பர்.

புகார் மற்றும் மாணவர்களின் கருத்துக்களை எளிதே தெரிவிக்க பள்ளி வளாகத்தில் பாதுகாப்பு பெட்டிகள் வைக்கப்படும்.




புகார்களை பதிவு செய்ய மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு தனியாக பதிவேட்டை பராமரிக்கும்.

ஆன்லைன் வகுப்புகளின் போது ஆசிரியர்கள், மாணவர்கள் கண்ணியமான உடைகளை அணிய வேண்டும்.

ஒரு மாத காலத்தில் மாநில அளவில் கட்டுப்பாட்டு அறை உருவாக்கப்படும்.

மாணவர்கள் குறைகளை தெரிவிக்கும் வகையில் கட்டணமில்லா தொலைபேசி எண், மின்னஞ்சல் முகவரி உருவாக்கப்படும்.

கிடைக்கப்பெறும் புகார்களை மாணவர் பாதுகாப்பு ஆலோசனை குழு மாநில கட்டுப்பாட்டு அறைக்கு தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story
கதிர் தொகுப்பு
Trending News