'பேனர்'ரில் என் பெயர் போடாம என்னடா நிகழ்ச்சி?' - பேனரில் தன் பெயர் இல்லை என பள்ளி திறப்பு விழாவை நிறுத்திய தி.மு.க நிர்வாகி!
பேனரில் தன் பெயர் குறிப்பிடப் படவில்லை என்ற காரணத்திற்காக பள்ளி திறப்பு விழாவை நிறுத்திய தி.மு.க நிர்வாகி.
By : Bharathi Latha
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி அருகே வன்னியம்பாக்கம் கிராமத்தில் பள்ளி திறப்பு விழாவில் தன் பெயரை பேனரில் குறிப்பிடப்படவில்லை என்ற காரணத்திற்காக திறப்பு விழா நிகழ்ச்சியை நிறுத்தி இருக்கிறார் திமுகவைச் சேர்ந்த நிர்வாகி ஒருவர். தி.மு.க மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகளுக்கு இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பள்ளி திறப்பு விழா தற்பொழுது ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கிராம மக்கள் நிர்வாகிகளின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தருவது இருக்கிறார்கள் மற்றும் பள்ளி திறக்காததன் காரணமாக ஏமாற்றத்தையும் அவர்கள் அடைந்து இருக்கிறார்கள்.
வன்னியன்பாக்கம் கிராமத்தில் ரூபாய் 19 லட்சம் செலவில் பள்ளி கட்டிடம் கட்டப்பட்டு இருக்கிறது. இதற்கு இந்த பள்ளிக்கான திறப்பு விழா காலை 9 மணி அளவில் பள்ளி வளாக கட்டிடத்தில் நடைபெற ஏற்பாடுகள் மும்மரமாக இருந்தது இதற்காக பொன்னேரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர், துரை சந்திரசேகர் தலைமையில் கட்டிடத் திறப்பு விழா நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்ச்சிக்காக பேனர்கள் கற்றுக் கொடுங்கள் என்ற சிறப்பான வகையில் ஏற்பாடு செய்யப்பட்டு பொதுமக்கள் மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவரும் கூடியிருந்தார்கள்.
மீஞ்சூர் கிழக்கு தி.மு.க ஒன்றிய செயலாளர் ஆக ரமேஷ் என்பவர் தன்னுடைய பெயர் பேனரில் இடம்பெறவில்லை என்று இந்த நிகழ்ச்சி நடைபெறக்கூடாது என்று கூறுகிறார். இதனிடையே விழாவை ஏற்பாடு செய்தவர்கள் அதிர்ச்சி அடைந்து இருக்கிறார்கள். எவ்வளவு சமாதானப்படுத்த முயன்றும் நிகழ்ச்சி நடைபெறக்கூடாது என்பதில் குறியாக இருந்தார்.
Input & Image courtesy: News 360