எங்க ஸ்கூலுக்கு சீல் வைங்க என்ற வீடியோ பதிவிட்டு, தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்ட பள்ளி மாணவர் - ஏன்!
பள்ளி ஆசிரியர் துன்புறுத்துவதாக கூறி வீடியோ ஒன்றை பதிவு செய்து வைத்து, பள்ளி மாணவர் தூக்கிட்டுத் தற்கொலை.
By : Bharathi Latha
சென்னை மாநகர் அம்பத்தூர் அடுத்து, குமரன் நகர் மகாத்மா மெயின் ரோடு பகுதியை சேர்ந்தவர் சேகர் என்பவர். இவர் தனியார் நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் ஊழியர் இவருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் அதே பகுதியில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆணடு படித்து வருகிறார். இளைய மகன் தனியார் பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறான். எப்பொழுதும் காலையில் வேலைக்கு செல்வது போன்று பெற்றோர்கள் வேலைக்கு சென்று உள்ளார்கள். இரு மகன்களும் பள்ளிக்கு, கல்லூரிக்கு புறப்பட்டு சென்றுள்ளார். மூத்த மகன் கல்லூரி விட்டு மாலையில் வீடு திரும்பும்பது தான் இந்த அதிர்ச்சி செய்தியை கேள்விப்பட்டு உள்ளார்.
இவருடைய இளைய மகன் பள்ளி முடித்து சீக்கிரமாக வீட்டிற்கு வந்த பிறகு தூக்கட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். மாலையில் வந்து மூத்த மகன் வீட்டின் கதவை திறந்த பிறகுதான் வீட்டில் தன்னுடைய தம்பி தூக்குமாட்டி இருந்திருக்கும் தகவல் அவருக்கு தெரியவர அக்கம் பக்கத்தினர் கூப்பிட்டு உள்ளார். அதன்பிறகு அங்கு கூடிய கூட்டம் ஏராளம். விவரத்தை அறிந்து கொண்ட போலீசார் சம்பவ இடத்திற்கு வந்துள்ளார்கள். தற்கொலை செய்து கொண்ட மாணவரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தார்கள். மேலும் வழக்குப்பதிவு செய்து, ஏன் தூக்கிலிட்டுக் கொண்டார்? என்பதற்கான காரணத்தையும் ஆராய்ந்தார்கள்.
மாணவர் தன்னுடன் அருகில் வைத்திருந்த செல்போனில் வீடியோ ஒன்றையும் பதிவு செய்திருப்பது தெரியவந்தது. வீடியோவை பார்த்த போலீசுக்கு காத்திருந்தது அதிர்ச்சி. ஏனெனில் "தன்னுடைய வகுப்பு ஆசிரியர் தன்னை தினமும் வகுப்பில் துன்புறுத்துவதாகவும், அவருடைய துன்புறுத்துதல் காரணமாகத்தான் நான் தற்கொலை செய்து கொள்கிறேன். கண்டிப்பாக எங்க ஸ்கூலுக்கு சீல் வையுங்க போலீசார்" என்று வீடியோவில் பதிவு செய்து வைத்து தூக்கிலிட்டு தற்கொலை செய்து கொண்டார். பள்ளிப் பருவத்தில் ஏன் தற்கொலை எண்ணம் வருகின்றது என்று தெரியவில்லை? தற்கொலை எண்ணம் வரும்போது 104 என்று என்னை தொடர்ந்து கொள்வதன் மூலமாக மன நல ஆலோசனைகள் கட்டாயம் பெற முடியும். தற்கொலை என்பது பிரச்சினைக்கு எப்போதும் தீர்வல்ல!
Input & image courtesy:News