6 முதல் 8ம் வகுப்பு வரை இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.!
6 முதல் 8ம் வகுப்பு வரை இந்த மாதம் பள்ளிகள் திறக்க வாய்ப்பு.!
By : Kathir Webdesk
கொரோனா ஊடரங்கு காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் இறுதி முதல் கல்வி நிறுவனங்கள் அனைத்தும் மூடப்பட்டது. இதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாகவே பாடங்கள் நடத்தப்பட்டு வந்தது. தற்போது கொரோனா தொற்று குறைந்த காரணத்தினால் கடந்த மாதம் 19ம் தேதி முதல் 10 மற்றும் 12ம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டது. இதனை தொடர்ந்து 9 மற்றும் 11ம் வகுப்பு மாணவர்களுக்கும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடைபெற்று வருகிறது. தினமும் மாணவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்கான மாத்திரைகள் கொடுக்கப்படுகிறது.
அதே சமயம் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளவும் அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாணவர்களுக்கும் சமூக இடைவெளியை கடைப்பிடித்து பாடங்கள் எடுக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், 6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கும் பள்ளிகளை திறக்க அரசு பரிரீலனை செய்து வருகிறது. மற்ற வகுப்பு மாணவர்களுக்கு சாத்தியமானதால் விரைவில் 6,7,8ம் வகுப்பு மாணவர்களுக்கும் இந்த மாதத்திற்குள் பள்ளிகள் திறக்கப்பட வாய்ப்புள்ளது என கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.