மசினகுடியில் புலியை தேடும் பணி தொடர்கிறது: கால்நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கு தடை!
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஜி23 புலியை தேடும் பணி கடந்த 18வது நாளாக நீடிக்கிறது.
By : Thangavelu
நீலகிரி மாவட்டம், மசினகுடி ஜி23 புலியை தேடும் பணி கடந்த 18வது நாளாக நீடிக்கிறது.
நீலகிரி மாவட்டம், தேவன் எஸ்டேட், மே பீல்டு, மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் 40க்கும் அதிகமான கால்நடைகளையும், 4 மனிதர்களையும் புலி அடித்துக்கொன்றது. இதனை பிடிக்க வேண்டும் என்று அப்பகுதி மக்கள் வனத்துறையினருக்கு கோரிக்கை வைத்ததை தொடர்ந்து கடந்த 18வது நாளாக தேடுதல் வேட்டை தொடர்ந்து வருகிறது.
புலியை பிடிக்க 5 ட்ரோன் கேமராக்கள், 85க்கும் மேற்பட்ட தானியங்கி கேமராக்கள், இரண்டு கும்கி யானைகள், மூன்று பயிற்சி பெற்ற போப்ப நாய்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. இது மட்டுமின்றி 50க்கும் மேற்பட்ட ஊழியர்கள், 20 அதிரடி படையினர் தமிழ்நாடு வன உயரடுக்கு படையினர் உள்ளிட்டோர் இணைந்து பல்வேறு குழுக்களாக புலியை தேடி வருகின்றனர்.
இந்நிலையில், 18வது நாளாக புலியை தேடுகின்ற பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். இதனால் மாயார், மசினகுடி உள்ளிட்ட பகுதிகளில் கால் நடைகளை மேய்ச்சலுக்கு கொண்டு செல்வதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக வனத்துறையினர் கூறியுள்ளனர்.
Source, Image Courtesy: News 7 Tamil