Kathir News
Begin typing your search above and press return to search.

பேரறிவாளன் சிறையில் இருந்ததே நாம சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியும் - சீமான்!

பேரறிவாளன் சிறையில் இருந்ததே நாம சொல்லித்தான் எல்லாருக்கும் தெரியும் - சீமான்!
X

Kathir WebdeskBy : Kathir Webdesk

  |  19 May 2022 4:42 PM IST

பேரறிவாளன் உள்ளிட்ட மூவர் வேலூர் சிறையில் இருந்தது என்னால் தான் வெளியே தெரிய வந்தது என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

சென்னை பூந்தமல்லியில் மே 18 இன எழுச்சி பொது கூட்டம் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் நடைபெற்றது.

அப்போது பேசிய அவர், நான் ஒருமுறை 6 மாதகாலம் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டேன். அதற்கு முன்பு, முருகன், சாந்தன், பேரறிவாளன் மூவரும் வேலூர் சிறையில்தான் இருந்தார்கள் என்பது யாருக்காவது தெரியுமா?

நான் சிறையில் இருந்த 6 மாதத்தில் அவர்களை 50ஆயிரம் பேர் சந்தித்தனர். அதற்கு பிறகுதான் இவர்கள், இவ்வளவு ஆண்டுகாலமாக சிறையில் இருக்கிறார்கள் என்பதே வெளியில் தெரியவந்துள்ளது.

பேரறிவாளன் விடுதலை செய்தி மகிழ்ச்சியை விட நம்பிக்கையை தருகிறது. தொடர் சட்டம் மற்றும் அரசியல் போராட்டம் நடத்தினார். அவரே அவரது விடுதலையை சாத்தியப்படுத்தினார் என கூறியுள்ளார்.

Inputs From: News18

Next Story
கதிர் தொகுப்பு
Trending News