தங்க கடத்தல் ஸ்பெஷலிஸ்ட்டுகள் - சென்னை ஏர்போர்ட்டில் சிக்கிய மர்ம நபர்கள்!

By : Kathir Webdesk
மும்பையில் இருந்து இண்டிகோ விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய தஞ்சாவூரைச் சேர்ந்த அப்துல் அஜீஸ் என்ற பயணியின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர்.
அப்போது அவருடைய கைப்பையில் 3 பண்டல்களில் வெளிநாட்டைச் சேர்ந்த தங்கக்கட்டிகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 855 கிராம் எடையிலான இதன் மதிப்பு 39 லட்சம் ரூபாய் ஆகும். சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும், பாங்காங்கில் இருந்து ஏர் ஏஷியா விமானம் மூலம் சென்னை வந்திறங்கிய சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த முகமது சபிக், ராமநாதபுரத்தைச் சேர்ந்த மிர்சாத் அலி ஆகிய 2 பயணிகளின் உடைமைகளை சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது 24 கேரட்டிலான, 2.5 கிலோகிராம் எடையிலான 1.16 கோடி ரூபாய் மதிப்புடைய தங்கக்கட்டிகளை அவர்கள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் இது பறிமுதல் செய்யப்பட்டது.
சுங்கத்துறை சட்டம் 1962-ன் கீழ் நான்கு பயணிகளும் கைது செய்யப்பட்டனர். இது குறித்த மேல்விசாரணை நடைபெற்று வருகிறது.
Input From: PIB
